கூடலூரில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு.

Update: 2023-11-17 05:28 GMT

உயிரிழந்த காட்டு யானை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சமீப நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. தேயிலை தோட்டங்கள் மட்டுமல்லாமல் குடியிருப்பு பகுதிகளிலும் காட்டு யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. இந்த நிலையில் இன்று புளியம்பாறை பகுதியில் வாழைத் தோட்டத்தில் காட்டு யானை உயிரிழந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானை இறந்த இடத்தை ஆய்வு செய்தனர் அப்பொழுது உணவுக்காக மரத்தை தள்ளியபோது மரம் மின் கம்பி மீது விழுந்து யானை மீது மின்சாரம் பாய்ந்துள்ளதை வனத்துறையினர் உறுதி செய்தனர். மேலும் இறந்த காட்டு யானையின் வயது 20 முதல் 25 வரை இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். வாழை தோட்டத்தின் உரிமையாளரிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடிக்கடி ஊருக்குள் வரும் யானைகளால் அச்சம் இருந்து வந்தாலும் மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்திருப்பது தங்களுக்கு வேதனையளிப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர். எனவே வனத்துறையினர் இனிவரும் நாட்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News