மல்லிகார்ஜுன கார்கே குடும்பத்தினருடன் சென்னை வருகை

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தனிப்பட்ட நிகழ்வுகளுக்காக குடும்பத்தினருடன் சென்னை வந்தார்.

Update: 2024-06-16 00:46 GMT

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தனிப்பட்ட நிகழ்வுகளுக்காக குடும்பத்தினருடன் சென்னை வந்தார்.


பெங்களூரில் இருந்து தனி விமான மூலம் சென்னை வந்த அவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், ஆகியோர் பூங்கொத்து வழங்கியும் சால்வை அணிவித்தும் வரவேற்றனர். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே வி தங்கபாலு, மாநிலத் துணைத் தலைவர்கள் சொர்ணா சேதுராமன், கோபண்ணா, மாநில அமைப்பு செயலாளர் ராமமோகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் அருள் பெத்தையா, செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் ஹசன் மௌலானா, ரூபி மனோகர், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சொல்வதற்கு ஒன்றும் இல்லை தனிப்பட்ட காரணத்திற்காக சென்னை வந்துள்ளேன். மருத்துவமனையில் உள்ள எனது மகனை சந்திப்பதற்காக செல்கின்றேன் என்றார்.

Tags:    

Similar News