கொணவட்டம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது
கொணவட்டம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.
வேலூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கொணவட்டம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் வேலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு வழிகாட்டுதலின்படி வேலூர் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் கொணவட்டம் பகுதியில் உள்ள மஸ்தான் பிரியாணி கடை அருகே சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது அந்தப் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த பயாஸ் அகமது என்கிற மஸ்தான் என்பவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 50 லாட்டரி சீட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்து வேலூர் வடக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
பின்னர் பயாஸ் அகமதை வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது கைதான வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.