சேலத்தில் பெயிண்டரின் கழுத்தை அறுத்தவர் கைது
காயமடைந்த பெயிண்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்;
Update: 2023-12-12 05:19 GMT
சேலம் லைன்மேட்டைச் சேர்ந்தவர் ஜிலானி (வயது 53). பெயிண்டர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முபாரக் (32) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு ஜிலானி அந்த பகுதியில் ஆட்டோவில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த முபாரக், கத்தியால் ஜிலானியின் கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் படுகாயம் அடைந்த ஜிலானியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முபாரக்கை கைது செய்தனர்.