திருவொற்றியூரில் கடலில் குளிக்க வந்தவர் மாயம்
திருவொற்றியூர் திருசின்ன குப்பம் பகுதியில் குளிக்க சென்றவர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Update: 2024-05-10 00:45 GMT
சென்னை, புது வண்ணாரப்பேட்டை இந்திரா நகரை சேர்ந்தவர் நித்தியானந்தம் (53). நண்பர்களுடன் திருவொற்றியூர் திருசின்ன குப்பம் பகுதியில் உள்ள கடலில் குளிக்க வந்த போது எதிர்பாராத விதமாக நித்தியானந்தம் ராட்சச அலையில் இழுத்துச் செல்லப்பட்டார். அவரது உடலை தேடும் பணியில் தீயணைப்பு படையினர், போலீசார் மற்றும் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.