மணலி சாலை விபத்தில் ஒருவர் பலி
மணலி விரைவு சாலையில் இரண்டு வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் நடுவில் சிக்கிக்கொண்ட இருசக்கர வாகன ஓட்டி தீயில் கருகி உயிரிழந்தார். .;
Update: 2024-04-16 03:51 GMT
மணலி விரைவு சாலையில் இரண்டு வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் நடுவில் சிக்கிக்கொண்ட இருசக்கர வாகன ஓட்டி தீயில் கருகி உயிரிழந்தார். .
சென்னை மணலி விரைவு சாலை சாத்தாங்காடு காவல் நிலையம் அருகே சிபிசிஎல் நிறுவனத்தின் ஆர் என் டி நுழைவு வாயில் அருகே சுற்றுலா வாகனத்தில் குடிபோதையில் ஓட்டி வந்த ஓட்டுநர் இருசக்கர வாகன ஓட்டி வந்தவர் மீது மோதிய போது அதே போன்று எதிர் திசையில் வந்த சரக்கு வாகனத்தில் மோதிய போது இரண்டு வாகனங்களின் இடையே சிக்கிக் கொண்ட நிலையில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்து இரு சக்கர வாகன ஓட்டி வந்தவர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தார். உயிரிழந்தவர் ஆண்டார்குப்பம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சுந்தரராஜன் வயது 28 என தெரிய வந்தது.