கட்சியை பதிவு செய்த மன்சூர் அலிகான்... அரசியலில் அதிரடி !
டெல்லியில் தனது அரசியல் கட்சி பெயரை பதிவு செய்துள்ளார் மன்சூர் அலிகான்.
டெல்லியில் தனது அரசியல் கட்சி பெயரை பதிவு செய்துள்ள மன்சூர் அலிகான் இனி அரசியலில் அதிரடி எனத் தெரிவித்துள்ளார்.
நடிகரும் அரசியல்வாதியும் தமிழ் தேசிய புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் தனது கட்சியின் பெயரை இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என மாற்றுவதாக அறிவித்தார். அதன்படி டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தனது கட்சியின் பெயரை இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி என பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு முடிவுடன் அரசியலில் இறங்கியுள்ளேன். அதிரடி அரசியல், உறியடித்தால் பதவி. கட்சிக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல்லாவரத்தில் முதல் மாநாடு நடைபெறும். " எனத் தெரிவித்தார்
மேலும் விஜயின் அரசியல் கட்சி குறித்து எழுப்பிய கேள்விக்கு, " முதலில் கல்யாணம் நடக்கட்டும்.. அப்புறம் முதலிரவு பற்றி பேசலாம்.." என பதில் அளித்துள்ளார்.