மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த வழக்கு ரத்து
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் அபராதத்தை ரத்து செய்து வழக்கை மறு ஆய்வு செய்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-29 17:37 GMT
மன்சூர் அலிகான்
நடிகைகள் த்ரிஷா, குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் கேட்டு மான நஷ்டஈடு வழக்கு தொடர அனுமதி கேட்டு மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனு தனி நீதிபதியால் அபராத்ததுடன் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தனி நீதிபதி மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், ஆர்.சக்திவேல் அமர்வு அந்த உத்தரவை மறு ஆய்வு செய்து வழக்கை விசாரிக்க மன்சூர் அலிகான் தாக்கல் செய்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.