இன்னும் பல அமைச்சர்கள் கைதாவார்கள்: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  

Update: 2023-12-22 05:38 GMT

எடப்பாடி பழனிசாமி  

இன்னும் பல அமைச்சர்கள் கைதாவார்கள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

சென்னையில் ஏற்பட்ட மழை - வெள்ளத்தால் அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. தமிழக முதல்வருக்கு நிர்வாகம் எவ்வாறு செய்வது என தெரிகிறதா என தெரியவில்லை. அவ்வாறு தெரிந்திருந்தால் அவர் செயல்பட்டிருப்பார்.

தமிழகத்தில் ஊழல் செய்வதுதான் திமுகவின் சாதனையாக உள்ளது. தமிழக அமைச்சர்கள் பலர், நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

Tags:    

Similar News