மாவோயிஸ்ட் நடமாட்டம்- சோதனை சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
Update: 2023-11-14 04:27 GMT
எஸ்.பி ஆய்வு
தமிழ்நாடு- கேரள மாநில எல்லையில் அமைந்திருக்கும் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநில தண்டர்போல்ட் சிறப்பு குழுவிற்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைப்பெற்றது. இதனை ஒட்டி தமிழக- கேரள மாநில எல்லையில் அமைந்திருக்கும் சோதனை சாவடிகள் மற்றும் வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதியில் அமைந்திருக்கும் ஓவேலி சோதனை சாவடி ஆகியவற்றை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் நேரில் பார்வையிட்டு அங்கு பணியில் இருக்கும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் தமிழக - கேரள எல்லையில் உள்ள நீலகிரி மாவட்ட சோதனை சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.