சுடர் தொடர் ஒட்டம் : அமைச்சர் உதயநிதி துவக்கிவைப்பு

சென்னையில் இருந்து சேலம் வரை சுடர் தொடர் ஒட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Update: 2024-01-18 16:28 GMT


சென்னையில் இருந்து சேலம் வரை சுடர் தொடர் ஒட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


திமுக இளைஞரணியின் 2 வது மாநாட்டு வரும் 21ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளதையொட்டி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னை சிம்சனில் உள்ள பெரியார் சிலையில் இருந்து சுடர் தொடர் ஓட்டத்தை துவங்கி வைத்தார். சென்னையில் இருந்து சேலம் வரை சுடர் தொடர் ஒட்டம். மொத்தமாக 316 கி.மீட்டர் பயணம் மேற்கொள்கிறார்கள். இதனை தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்* இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டு வருகின்ற 21ஆம் தேதி இளைஞர் அணி மாநாடு நடைபெற உள்ளது. தலைவர் இளைஞர் அணிக்கு கொடுத்தது மிகப்பெரிய சவால் என்றார் அதை நாம் வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் உதயநிதி இளைஞர் அணி மாநாட்டிற்கு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

3 முதல் 4 லட்சம் இளைஞர்கள் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 310 கிலோ மீட்டருக்கு சுடர் ஏந்தி தொடர் ஓட்டம் நடைபெறும் அதனை இறுதியாக சேலத்தில் தலைவரிடம் கொடுக்கப்படும் 85 லட்சம் கையெழுத்துகள் நீட் தேர்வை விலக்க கோரி வாங்கி உள்ளோம் மாநாட்டின் போது அதை திமுக தலைவரிடம் ஒப்படைப்போம் பின்னர் நேரடியா நானே குடியரசு தலைவரை சந்தித்து அதனை வழங்க இருக்கிறோம். ராமர் கோயில் திறப்பிற்கோ, அல்லது மத நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதால்தான் அதில் திமுகாவிற்கு உடன்பாடு இல்லை எடப்பாடி பழனிச்சாமி கால் வலி காரணமாக ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்த கேள்விக்கு, அவர் தவிழ்ந்து தவிழ்ந்து போவதால் அவருக்கு அடிக்கடி கால் வலி வருகிறது என விமர்சித்தார்.

Tags:    

Similar News