ஆதிகேசவபெருமாள் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.;
Update: 2023-12-18 04:24 GMT
மார்கழி சிறப்பு பூஜை
உளுந்துார்பேட்டை கனகவல்லி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் மார்கழி மாதம் முதல் நாளான நேற்று காலை 4.30 மணியளவில் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோமாதா வுக்கு பூஜை செய்து வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.