மே 9ஆம் தேதி முதல் மதிப்பெண் பட்டியல்
பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மே 9 ஆம் தேதி முதல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.
Update: 2024-05-06 16:23 GMT
இன்று 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மே 9 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாக மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம், அல்லது பிறந்த தேதி பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தாங்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், தனித் தேர்வர்களும் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வழியாகவும் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர் எழுதிய மையங்கள் வழியாகவும் நாளை மே 7 ஆம் தேதி காலை 11 மணி முதல் மே 11ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பாடத்திற்கும் விடைத்தாள் நகல் பெற 275 ரூபாயும், மறு கூட்டல் கட்டணம் உயிரியல் படத்திற்கு மட்டும் 305 ரூபாயும், மற்ற பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் 205 ரூபாயும் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீட்டு கோரி விண்ணப்பிக்க இயலும். மதிப்பெண் மறு கூட்டல் கோரி விண்ணப்பிக்கும் பாடத்திற்கு விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பிக்க இயலாது. விடைத்தாளில் நகல் பெற்ற பிறகு மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்படும்.