அதிமுகவுக்கு மருதநாட்டு மக்கள் கட்சி ஆதரவு
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மருதநாட்டு மக்கள் கட்சி அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-17 15:51 GMT
அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் மருத நாட்டு மக்கள் கட்சியினர் சந்தித்து பேசினர்.
பின் செய்தியாளர்களை சந்தித்த மருத நாட்டு மக்கள் கட்சி தலைவர் ராஜு குமார், நாடாளுமன்ற தேர்தலில் நிபநதனையற்ற ஆதரவை அதிமுகவுக்கு தெரிவிக்கின்றோம். தமிழ்நாட்டில் போதைப்பொருள் கஞ்சா விற்பனை அதிகமாகிவிட்டது அதை தடுக்க தவறிய திமுக அரசிற்கு எதிராக மதசார்பற்ற எடப்படியார் தலைமையிலான கூட்டணிக்கு தென்னாட்டில் உள்ள தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினர் நிபந்தனையற்ற வாக்குகளை தெரிவிப்பார்கள்.