பிரதமர் பிரச்சாரத்தில் மாணவர்கள் கலந்து கொண்ட விவகாரம்: நீதிமன்றம் உத்தரவு
கோவை பிரதமர் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விவகாரத்தில் காவல்துறையினர் பதிலளிக்கும் வரை பள்ளி மீது எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-29 12:12 GMT
பிரதமர் நிகழ்ச்சியில் மாணவர்கள்
கோவையில் நடந்த மோடி பிரச்சார நிகழ்ச்சியில், பள்ளிக்குழந்தைகள் சீருடையில் கலந்து கொண்ட விவகாரம் தொடர்பாக பள்ளி மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி பள்ளி தலைமை ஆசிரியர் புகழ் வடிவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஏப்ரல் 3 ஆம் தேதிக்குள் கோவை சாய் பாபா காலணி காவல்நிலையம் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அதுவரை எந்த நடவடிக்கையும் பள்ளி மீது எடுக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.