10 ஆண்டுகளில்.. அதிகபட்ச எண்ணிக்கை - வெளியுறவு அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

Update: 2024-07-24 10:50 GMT

ஸ்டாலின் கடிதம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 9 மீனவர்கள், அவர்களது படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ''ராமேஸ்வரத்தை சேர்ந்த 9 மீனவர்கள் நேற்று முன் தினம் மீன்பிடிக்க சென்ற போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 22 வரை மட்டும் 250 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் இதுபோன்று அச்சுறுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகள், கருவிகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து தடையின்றி நடைபெற்று வருகிறது. இதனால் மீனவ மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில், ஒரு ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மிக அதிகபட்ச எண்ணிக்கை இது. இலங்கை சிறையில் உள்ள 87 மீனவர்கள், 175 படகுகளை விரைவாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். '' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News