மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

மயிலாடுதுறை மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-03-27 01:32 GMT

 சுதா ராமகிருஷ்ணன்

மயிலாடுதுறை தொகுதி இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வேட்பாளர் அறிவிப்பில் காலதாமதம் ஏற்பட்டதால் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் அதிருப்தியில் இருந்தனர்.

இன்று வேட்மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்ற நிலையில் நேற்று மாலை காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்தது.

மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வழக்கறிஞர்ஆர்.சுதா ராமகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவர், தமிழ்நாடு மகிளா காங்கிரஸில் மாநிலத் தலைவர், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர், அகில இந்திய காங்கிரஸின் முக்கிய செய்தி தொடர்பாளராகவும் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து வருகிறார்.

 ராகுல் காந்தியின் பரிந்துரையில் இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. திருவாரூர் மாவட்டம் கிடாரம் கொண்டான் இவருடைய சொந்த ஊர் ஆகும்.

Tags:    

Similar News