மயிலாடுதுறை; பிரதமர் கானொளி காட்சி - வெறிச்சோடிய நாற்காலிகள்

Update: 2023-12-10 07:20 GMT

காலியாக இருந்த நாற்காலிகள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மயிலாடுதுறை அருகே தனியார்  கல்லூரியில் ,நமது லட்சியம்  வளர்ச்சி அடைந்த பாரதம், விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரை  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர்  சர்பானந்த சோனோவால், கலந்து கொண்டு   பிரச்சார வாகனம்  மற்றும் பல்வேறு அரங்குகளை பார்வையிட்ட, பின்னர், பயனாளிகளுக்கு கடன்திட்ட உதவிகளை வழங்கிவைத்து, உரை நிகழ்த்தினார்.      

Advertisement

இந்த நிகழ்ச்சியின்ஒரு பகுதியாக ,பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசின், திட்டத்தின் கீழ் பயனடைந்த, பல்வேறு மாநில அளவில் உள்ள, பயனாளிகளுடன், காணொலி மூலம் கலந்துரையாடினார். இதை பார்த்துக் கொண்டருந்த பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் ,பிரதமர் மோடியின் உரையை கேட்காமல் அரங்கை விட்டு வெளியேறினர். இதனால் மத்திய அமைச்சர் மற்றும் அலுவலர்கள், கட்சியினர் தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் வெளியேறியதால், மோடி உரையின் போது நாற்காலிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Tags:    

Similar News