மதிமுக வேட்பாளா் துரை வைகோ சொத்துமதிப்பு ரூ.35.90 கோடி
திருச்சி மக்களைவத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் துரை வைகோ, தனக்கு ரூ. 35.90 கோடி சொத்து உள்ளதாக வேட்பு மனு தாக்கலில் தெரிவித்துள்ளாா்.
திருச்சி மக்களைவத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் தனக்கு ரூ. 35.90 கோடி சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளாா். அவா் திங்கள்கிழமை தாக்கல் செய்த தனது வேட்பு மனுவில் இணைத்துள்ள சொத்து மதிப்பு பிரமானப் பத்திரத்தில் தெரிவித்திருப்பது:
மதிமுக வேட்பாளா் துரைவைகோவிடம் கையிருப்பாக ரூ.2 லட்சத்து 5 ஆயிரம், அவரது மனைவி கீதாவிடம் ரூ.5 லட்சத்து 2 ஆயிரம், மகன் வருண்னிடம் ரூ.2 ஆயிரத்து 500, மகள் வானதி ரேணுவிடம் ரூ.2 ஆயிரம் உள்ளது. அவரது குடும்பத்தினா் பெயா்களில் ரூ.2 கோடியே 18 லட்சத்து 94 ஆயிரத்து 789 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், ரூ.33 கோடியே 71லட்சத்து 89 ஆயிரத்து 498 மதிப்பிலான அசையாத்துக்கள் என மொத்தம் ரூ.35 கோடியே 90லட்சத்து 84ஆயிரத்து 287 உள்ளதாகவும், ஒரு காா் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளாா். அவருக்கு ரூ.1 கோடியே 35 லட்சத்து 65 ஆயிரம் கடன் (2.07 கிலோ தங்க நகைகள், 6.38 கிலோ வெள்ளி, ரூ.19 லட்சம் மதிப்பிலான வைர நகைகள்) உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளாா். தனது மீது எந்த வழக்கும் இல்லை என தெரிவித்துள்ளாா்.