மதிமுக - நிர்வாகக் குழு அவசரக் கூட்டம் தொடங்கியது
மதிமுக - நிர்வாகக் குழு அவசரக் கூட்டம் சென்னை எழும்பூரிலுள்ள கழக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.;
Update: 2024-03-07 07:06 GMT
மதிமுக - நிர்வாகக் குழு அவசரக் கூட்டம் சென்னை எழும்பூரிலுள்ள கழக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக்குழு அவசரக் கூட்டம் சென்னை எழும்பூர் உள்ள தலைமை அலுவலகத்தில் கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ. அர்ஜூனராஜ் தலைமையில் தொடங்கியது இக்கூட்டத்தில் உயர்நிலைக்குழு, மாவட்டக் கழகச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, தணிக்கைக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மையம், ஆகிய அமைப்புக்களின் செயலாளர்கள் குழுக்களின் உறுப்பினர்கள், தலைமைக் கழக மற்றும் அணிகளின் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு நாடாளுமன்ற தேர்தலை பற்றி ஆலோசனை மேற்கொள்கின்றனர் குறிப்பாக திமுக-வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாக தொடர்வதால் அதற்கான ஒரு முடிவு எடுக்க இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மதிமுக-வின் இறுதிக்கட்ட தொகுதி நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது....