தடையை மீறி இறைச்சி விற்பனை: 100 கிலோ இறைச்சி பறிமுதல்!

வேலூர் மாநகராட்சியில் தடையை மீறி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 100 கிலோ இறைச்சியை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-04-22 15:35 GMT

வேலூர் மாநகராட்சியில் தடையை மீறி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 100 கிலோ இறைச்சியை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி நேற்று (22.04.2024) கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோழி, ஆடு, மாடுகளை கொன்று விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் வேலூர் மாநகராட்சி பகுதியில் தடை மீறி கோழி, மாட்டின் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் ஜானகிக்கு புகார்கள் சென்றன. அவரின் உத்தரவின்பேரில் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் சிவக்குமார், பாலமுருகன் ஆகியோர் கொணவட்டம், சத்துவாச்சாரி, சைதாப்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் இறைச்சி விற்பனை செய்யப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொணவட்டம், சேண்பாக்கம் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட 70 கிலோ மாட்டின் இறைச்சியும், 30 கிலோ கோழி இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டது. சத்துவாச்சாரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் திறந்திருந்த ஆட்டு இறைச்சி விற்பனை கடைக்கு ரூ.3 ஆயிரமும், கோழி இறைச்சி விற்பனை கடைக்கு ரூ.2 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டன.
Tags:    

Similar News