அதிமுக தலைமையில் தான் மெகா கூட்டணி அமையும் - கே.பி.முனுசாமி

அதிமுக தான் தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி, தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்துள்ளது. 2 கோடி தொண்டர்களை கொண்ட மாபெரும் இயக்கத்தின் தலைமையில் தான் கூட்டணி அமையும். அதிமுக தலைமையின் கீழ் கூட்டணிக்கு வரும் கட்சிகளை சேர்த்துக்கொள்வோம் என கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

Update: 2024-02-08 06:23 GMT
 கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் வருகிற 11ம் தேதி மாற்றுக்கட்சியினர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைப்பெற உள்ளது.. அதற்காக ஒசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தலைமையில் நடைப்பெற்றது கட்சியினருக்கு கே.பி.முனுசாமி ஆலோசனைகளை வழங்கிய பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்; கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10000 தொண்டர்கள்,நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைகின்றனர் . பாஜகவில் முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் இணைந்தது குறித்த கேள்விக்கு: அப்படி அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜக வில் இணைந்திருக்கிறார்கள் என்றால் அநேகமாக அவர்கள் கட்சியில் செயல்படாதவர்களாக தான் இருக்கும் .எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் மெகா கூட்டணி அமையும் அதிமுகவிற்கு கதவு திறந்திருப்பதாக அமித் ஷா தெரிவித்திருப்பதாக பத்திரிகையாளர்களின் கேள்விக்கு; அதிமுக தான் தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி, தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்துள்ளது. 2 கோடி தொண்டர்களை கொண்ட மாபெரும் இயக்கத்தின் தலைமையில் தான் கூட்டணி.. அதிமுக தலைமையில் கூட்டணிக்கு வரும் கட்சிகளை சேர்த்துக்கொள்வோம் பாஜக கூட்டணிக்கு வந்தாலும் சேர்த்துக்கொள்வீர்களா என்கிற கேள்விக்கு: இது முடிந்த கருந்து இனி கேள்வி கேட்க அவசியமில்லை என பேசினார்
Tags:    

Similar News