மேட்டூர் அணை நீர்வரத்து 6,498 கன அடியாக அதிகரிப்பு
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53.80 அடியில் இருந்து 54.55 அடியாக உயர்ந்துள்ளது.;
Update: 2023-11-08 05:03 GMT
மேட்டூர் அணை
தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கான நீரவரத்து தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. நீர்வரத்து நேற்று வினாடிக்கு 2,702 கன அடியாக இருந்த நிலையில் இன்று 6,498 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53.80 அடியில் இருந்து 54.55 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 20.79 டிஎம்சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை அளவு 4.20 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது.