மேட்டூர் அணை நீர்மட்டம் 68.53 அடியை எட்டியது

மேட்டூர் அணை நீர்மட்டம் 68.53 அடியை எட்டியது;

Update: 2023-12-10 12:19 GMT

மேட்டூர் அணை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 10-ந் தேதி முதல் டெல்டாவுக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 மாதமாக பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

மேலும் அணைக்கு வரும் நீர் வரத்தை விட குறைந்த அளவிலேயே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68.53 அடியாக இருந்தது .

அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 412 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News