அதானி துறைமுகம் போதை பொருளின் புகழிடமாக உள்ளது அமைச்சர் குற்றச்சாட்டு.
அதானி துறைமுகம் போதை பொருளின் புகலிடமாக உள்ளது என குழித்துறையில் சாலைப் பணிகளை துவங்கி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் சாலை பணிகளை துவங்கி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறும் போது.தமிழகத்தில் திமுக தலைமையில் மக்களின் பேராதரவுடன், வலுவான கூட்டணி உள்ளது.
அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும், தமிழகத்தில் அதிகமான கட்சிகள் உள்ளது. அனைத்துக் கட்சிகளையும் கூட்டணியில் சேர்ப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை, போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக திமுக யாரையும் பாதுகாக்கவும் இல்லை, விசாரணையை தடுக்கவும் இல்லை, வட இந்தியாவில் குஜராத் குறிப்பாக அதானி துறைமுகம் போதைப் பொருள் கடத்தலுக்கு புகலிடமாக உள்ளது.
அங்கு பல கோடி ரூபாய் உள்ளஅங்கு பல கோடி ரூபாய் உள்ள போதை பொருள் பிடிபட்டுள்ளது. இந்த கடத்தல் தொடர்பாக திமுக மீது புகார் கூறுவதற்காக இருட்டு கொண்டு ஓட்டை அடைக்க பார்க்கிறார்கள், தமிழக மக்களுக்கு இது தொடர்பாக தெளிவாக அனைத்து விஷயம் தெரியும் இவ்வாறு அவர் கூறினார்.