காஞ்சிபுரத்தில் 183பேருக்கு திருமண நிதி உதவி வழங்கிய அமைச்சர் அன்பரசன்

காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் அன்பரசன் கலந்துகொண்டு 183 பயனாளிகளுக்கு ரூபாய் 76 லட்சத்து 50 ஆயிரம் வழங்கினார்.

Update: 2024-02-07 10:57 GMT


காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் அன்பரசன் கலந்துகொண்டு 183 பயனாளிகளுக்கு ரூபாய் 76 லட்சத்து 50 ஆயிரம் வழங்கினார்.


சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் பத்தாம் வகுப்பு பயின்ற பின் திருமணமான பெண்ணுக்கு எட்டு கிராம் தங்கம் ரூபாய் 25,000 பட்டம் பெற்ற திருமண பெண்ணிற்கு எட்டு கிராம் தங்கம் ரூபாய் 50 ஆயிரம் என வழங்கப்படுகிறது.

அவ்வகையில் , காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழக குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் கலந்துகொண்டு இந்த ஆண்டிற்கான 183 பயனாளிகளுக்கு ரூபாய் 76 லட்சத்து 50 ஆயிரம் வழங்கினார். இதில் விழாவில் அமைச்சர் அன்பரசன் பேருரை ஆற்றிய போது கடந்த 2021 22 இல் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 845 பட்டம் பெற்ற பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ50,000, பத்தாம் வகுப்பு , 12ஆம் வகுப்பு பயின்ற 911 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கம், ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் 1756 பயணாளிகளுக்கு ரூபாய் 12.68 கோடியில் நிதி உதவியும் 20 புள்ளி 3 5 kg தங்கம் வழங்கப்பட்டது.

அவ்வகையில் தற்போது 2023-24 ம் நிதியாண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 183 பயனாளிகளுக்கு ரூபாய் 76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும் , 8 கிராம் தங்கம் என மொத்தம் 1.5 கிலோ கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. இதில் 60 பயனாளிகள் பத்தாம் வகுப்பு மற்றும் 12 வது வகுப்பு பயின்ற பயனாளிகள் எனவும் 123 பட்டதாரி பயனாளிகளும் இதன் மூலம் பயன் பெற்றனர். இதேபோல் திருநங்கைகள் சொந்தமாக தொழில் துவங்கிட மானியமாக தலா ஒருவருக்கு ஐம்பதாயிரம் வீதம் 20 திருநங்கைகளுக்கு ரூ 10 லட்சம் வழங்கப்பட்டது.

இதேபோல் இந்த கல்வி ஆண்டில் புதுமை பெண் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறும் மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக தமிழக முதல்வரின் வாழ்த்து செய்தியை மடலாக 71 கல்லூரிகளில் பயிலும் 2486 புதுமைப்பெண் திட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, பயிற்சி ஆட்சியர் சங்கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் ஜெயக்குமார், மேயர் மகாலட்சுமி மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News