நார்வே நூலகத்தில் விசிட் அடித்த அமைச்சர் அன்பில் மகேஷ் !
Update: 2024-05-31 08:30 GMT
அன்பில் மகேஷ் !
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டென்மார்க், சுவீடன், நார்வே ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள பள்ளிகளின் வகுப்புகள் மற்றும் ஆய்வகங்களை நேரில் பார்வையிட்ட அவர், அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
தற்போது பெர்கன் நகரில் உள்ள பொது நூலகத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டார். சுமார் ஏழு லட்சம் நூல்களை கொண்டுள்ள பெர்கன் நூலகம், நார்வே நாட்டின் இரண்டாவது பெரிய பொது நூலகமாக உள்ளது. 9 கிளை நூலகங்கள் உட்பட அந்நாட்டு சிறைகளில் உள்ள நூலகங்களும் பெர்கன் நூலகத்தின் மேற்பார்வையில் இயங்குவது குறிப்பிடத்தக்கது.