திமுக பொறுப்பாளர்களுடன் அமைச்சர் ஆலோசனை

வேலூரில் தேர்தலை முன்னிட்டு அமைச்சர் துரைமுருகன் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

Update: 2024-03-30 08:48 GMT

ஆலோசனை கூட்டம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதி தி.மு.க. பொறுப்பாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் வேலூரில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., குடியாத்தம் எம்எல்ஏ அமலுவிஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார்.

Tags:    

Similar News