அமைச்சர் எ.வ.வேலு - 4வது நாளாகத் தொடரும் வருமான வரி சோதனை

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக வருமான வரி சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Update: 2023-11-06 02:30 GMT

வருமான வரித்துறை சோதனை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. சென்னை. திருவண்ணாமலை உள்பட எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருவண்ணாமலையில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நேற்றும், நேற்று முன்தினமும் தொடர்ந்து சோதனை நடைபெற்றது.இந்த நிலையில், அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக இன்றும் தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் ஏ.வ. வேலுவின் வீடு, கல்வி நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையானது நாளை வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறித்த தகவலை வருமான வரித்துறை தரப்பில் வெளியிடவில்லை. சோதனையின் முடிவில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு புகாரிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாகவும் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News