கனிமொழிக்கு ஆதரவாக அமைச்சர் கீதா ஜீவன் தீவிர பிரச்சாரம்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி ஆதரித்து அமைச்சர் கீதா ஜீவன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Update: 2024-04-02 01:04 GMT

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி ஆதரித்து அமைச்சர் கீதா ஜீவன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.




தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியின் திமுக சார்பில் கனிமொழி கருணாநிதி போட்டியிடுகிறார் அவரை ஆதரித்து தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி பகுதியான கால்டுவெல் காலனி அமுதா நகர் வள்ளிநாயகபுரம் செல் சினி காலனி பிரையண்ட் நகர் சிதம்பர நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த அமைச்சர் கீதா ஜீவனுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்ப்பளித்தனர் இதைத் தொடர்ந்து வாக்கு கேட்டு பேசிய அமைச்சர் கீதா ஜீவன் ஒன்றியத்தில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் மோடியின் ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் வாக்களிக்க வேண்டும் எனவும் தற்போதைய நிலவரப்படி அரசியலமைப்பு சட்டம் திருத்தம் என்பது தேவையில்லாத ஒன்று டாக்டர் அம்பேத்கர் கொண்டு வந்த சட்டம் இதனால் வரை நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மோடி அரசு அரசியலமைப்புச் சட்டங்களை திருத்தி வருகிறது எனவும் தமிழகத்துக்கு என எந்த ஒரு சிறப்பு திட்டத்தையும் ஒன்றிய பாஜக அரசு செயல்படுத்தவில்லை எனவும் கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை குட்டிச் சுவராக ஆக்கியுள்ளது.

பாஜக எதிரிகள் இருக்கக் கூடாது என்ற வகையில் டெல்லி முதலமைச்சர் உள்ளிட்ட இரண்டு முதலமைச்சர்களை சிறையில் அடைத்துள்ளனர் என தெரிவித்தார் மேலும் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த போது நாங்கள் கருப்பு பணத்தை மீட்போம் என தெரிவித்தனர் ஆனால் இப்போது அவர்கள் கட்சியில் தான் கருப்பு பணம் உள்ளது என தெரிவித்தார் தமிழகத்தில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார் அந்த வகையில் தான் மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்ட மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது இதுபோல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் வருகிற ஜூன் மாதம் முதல் ஆயிரம் ரூபாய் மாதம் வழங்கப்படும் இது மட்டுமின்றி கலைஞர் மகளிர்மை தொகை என்பது அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது இந்த உரிமை தொகையை பெறாதவர்களுக்கும் ஜூன் மாதத்திற்கு பிறகு சிறப்பு முகாம் நடத்தி அவர்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என தெரிவித்தார் மேலும் நமது இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற வேண்டும் என்ற வகையில் தூத்துக்குடியில் 16,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வின் பாஸ்ட் என்ற மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை விரைவில் உற்பத்திய துவங்கும் அப்போது இந்த பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார் இந்த பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் சண்முகம் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் மாமன்ற உறுப்பினர்கள் வைதேகி சரவணகுமார் ராமகிருஷ்ணன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தைகள் மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News