மீனவர்கள் கோாிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் கீதாஜீவன்!
தூத்துக்குடி கடற்கரை பகுதியில் சிந்தாதிாி மாதா கோவில் அருகில் மழை நீர் தேங்காத வகையில் அமைச்சா் கீதாஜீவன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.;
தூத்துக்குடி கடற்கரை பகுதியில் சிந்தாதிாி மாதா கோவில் அருகில் மழை நீர் தேங்காத வகையில் அமைச்சா் கீதாஜீவன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இனி வரும் காலங்களில் அது போன்ற நிலை வராமல் இருப்பதற்கு அரசின் சாா்பில் பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி கடற்கரை சாலை, எஸ்.பி, கலெக்டர் பங்களா அருகில் உள்ள கடற்கரை பகுதியில் சிந்தாதிாி மாதா கோவில் இருந்து வருகிறது. அப்பகுதியை சார்ந்த மீனவர்கள் மாதா கோவிலை பராமாித்து வழிபட்டு வந்தனர். அப்பகுதியில் கடலுக்கு செல்லும் மீனவர்களும் மாதாவை தனது தெய்வமாக கருதி வழிபட்டு வருகின்றனர்.
மழை காலங்களில் மாதா கோவில் பகுதி முழுவதும் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பல்வேறு வகையில் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவனிடம் கோாிக்கை வைத்தனர். இதனையடுத்து இரு தினங்களுக்கு முன்பு அந்த பகுதியை ஆய்வு மேற்கொண்டு எதிர்காலத்தில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அவரது சொந்த செலவில் அப்பகுதியில் உள்ள மாதா கோவில் ஆலயத்தை சுற்றி மணல்கள் மூலம் உயர்த்தப்பட்டு சாலைகளிலிருந்து கோவிலை நோக்கி வரும் மழைநீர்கள் கடலுக்கு செல்லும் வகையில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் அமைச்சருக்கு நன்றி தொிவித்துக் கொண்டனர். ஆய்வின் போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் எடின்டா, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.