பூரண மதுவிலக்கை உடனே கொண்டு வர வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள். - அமைச்சர் முத்துசாமி

பூரண மதுவிலக்கை உடனே கொண்டு வர வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள். கள்ளச்சாராய விவகாரத்தில் யாரையும் தப்ப விடாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்தார்.

Update: 2024-06-30 08:09 GMT

அமைச்சர் முத்துச்சாமி 

சட்டப்பேரவையில் பூரண மதுவிலக்கு குறித்து விவாதம் எழுந்த பொழுது பேசிய அமைச்சர் முத்துசாமி, இவ்வளவு கடுமையாக சட்டம் கொண்டுவரப்படுகிறது என்றால் இது இனி நடக்கக்கூடாது என்ற எண்ணத்தில் தான். யாராவது எத்தனால் சப்ளை செய்தால் அவர்களை விட்டு விடுகிறார்கள் என்றார்கள். ஓரிடத்தில் அவர்கள் இருந்து குடித்த இடம் யாருக்கு சொந்தமோ அவர்கள் மீது கூட நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது யாரும் விடப்படவில்லை.

இது இனிமேல் நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவற்றையும் திருத்தத்தில் கொண்டு வரலாம் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியாக சில கருத்துக்களை பேசுகிறார்கள் ஆனால் இந்த சம்பவம் இருக்க அதைத் தடுக்க என்ன ஆலோசனை என்று தான் கேட்கிறோம். பூரண மதுவிலக்கு வேண்டும் என்று ஜி கே மணி கேட்டார். பூரண மதுவிலக்கை உடனே கொண்டு வர முடியும் என்றால் அதற்கு காரணம் சொல்லுங்கள்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு தனிமனிதனாக யோசித்து சொல்லுங்கள். படிப்படியாக கடைகளை குறைக்க வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்து உள்ளார். அது நடந்து வருகிறது. ஒரு கடையை மூடினால் அருகில் உள்ள கடைக்கு சேர்ந்து சென்று வாங்குகிறார்கள் இது நடைமுறை சிக்கல். அவர்களை குடிகாரன் என்று சொல்ல வேண்டாம் என்று நான் பேசியதை தவறாக பேசுகிறார்கள். அவர்களை எப்படி வெளியில் கொண்டு வர வேண்டும் என்று சீர்தூக்கி பார்க்க வேண்டும். சரியான முடிவை முதலமைச்சர் எடுப்பார். கமிட்டி போடுகிறார்கள், அதில் வரும் கருத்துக்கள் நீங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் அனைத்தும் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

Tags:    

Similar News