அமைச்சர் ராமசந்திரன் மருத்துவமனையில் அனுமதி

வழக்கமான பரிசோதனைக்காக வருவாய்த்துறை அமைச்சர் ராமசந்திரன் சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.;

Update: 2024-04-01 08:50 GMT

வழக்கமான பரிசோதனைக்காக வருவாய்த்துறை அமைச்சர் ராமசந்திரன் சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வழக்கமான பரிசோதனைக்காக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி இன்று மாலை வீடு திரும்புவார் எனவும் நாளை தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி ஆதரித்து பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்பார் எனவும் தகவல் இருதயவியல் மருத்துவர் இரண்டு நாட்களில் வெளிநாடு செல்வதன் காரணமாக வழக்கமான பரிசோதனைக்கு அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் சென்றுள்ளார்.

Advertisement

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ் ஆர்.ராமச்சந்திரன் நேற்று தேர்தல் பிரச்சாரம் தொகுதியில் மேற்கொண்டு வந்துள்ளார் இந்த நிலையில் நேற்று இரவு சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் இருதயவியலில் மற்றும் சக்கரை நோய் காரணமாகவும் வழக்கமான பரிசோதனைக்காகவும் அனுமதி ஆகியுள்ளார் முன்னதாக அப்போல்லோ மருத்துவமனையில் வழக்கமாக பரிசோதனை மேற்கொள்ளும் மருத்துவர் இரண்டு நாட்களில் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளதால் வழக்கமான பரிசோதனை மேற்கொள்ளும்படி மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

  இந்த நிலையில் இருதவியல் மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட பரிசோதனைகள் அமைச்சர் கேகேஎஸ்எஸ் ஆர். ராமச்சந்திரனுக்கு மேற்கொள்ளப்பட்டது இருதயவியல் சம்பந்தப்பட்ட பரிசோதனைகள் அனைத்தும் மேற்கொண்ட பிறகு இன்று மாலை அவர் வீடு திரும்புவார் எனவும் நாளை தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட பிறகு தொடர்ச்சியாக பொதுக்கூட்டத்திலும் பங்கேற்பார் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Tags:    

Similar News