அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு - கோபத்தில் சரமாரி கேள்வி கேட்ட நீதிபதி

தில் மனு தாக்கல் செய்ய முடியவில்லை என்றால் எதற்காக வழக்கு தொடர்கிறீர்கள்?” என அமலாக்கத் துறைக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி

Update: 2024-01-08 10:56 GMT

Senthil Balaji

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையில் பதில் மனு தாக்கல் செய்யாததால் அமலாக்கத்துறை மீது நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது.

2015ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதனடிபப்டையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யபப்ட்டது. அதன் விசாரணை அடிப்படையில் கடந்த 2014ம் ஆண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யபப்ட்டார்.

வழக்கு விசாரணையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக மூவாயிரம் பக்கஞ்களை கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் அமலாக்கத்துறையால் தாக்கல் செய்யபப்ட்டனர். இதற்கிடையே, தனது உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீன் கேட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் 2 முறை மனுதாக்கல் செய்யபப்ட்டது. அந்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன. அதேநேரம் செந்தில் பாலாஜி உடல்நிலையை கருத்தில் கொண்டு கீழமை நீதிமன்றத்தை மீண்டும் நாடலாம் என்றும், அந்த மனு மீது கீழமை நீதிமன்றம் முடிவெடுக்கும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மீண்டும் மூன்றாவது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கின் ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாகவும், 200 நாட்களுக்கு மேலாக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதாகவும், ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு இன்று, நீதிபதி எஸ்.அல்லி முன்பு திங்கள்கிழமை காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் வருவதற்காக விசாரணையை சிறிது நேரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதனால் கோபமடைந்த நீதிபதி, “ஏற்கெனவே இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டும் இதுவரை தாக்கல் செய்யவில்லை. பதில் மனு தாக்கல் செய்ய முடியவில்லை என்றால் எதற்காக வழக்கு தொடர்கிறீர்கள்?” என அமலாக்கத் துறைக்கு கேள்வி எழுப்பினார்.

அதன்பிறகு அமலாக்கத்துறை சார்பில் வழக்கின் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. வாதத்தை கேட்ட நீதிபதி, “மாநில காவல் துறை ஒரு நாளைக்கு 120 ஜாமீன் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்கிறது. இந்நிலையில், ஒரு வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்கத் துறை கூறும் காரணம் ஏற்கும்படியில்லை” என அதிருப்தி தெரிவித்தார்.

Tags:    

Similar News