ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை தென் மாவட்டங்களுக்கு இயக்குவது குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.;
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை தென் மாவட்டங்களுக்கு இயக்குவது குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி இன்று சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அலுவலகக் கூட்டரங்கில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் இம்முனையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு முழுமையாக இயக்குவது குறித்தும், உரிய நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடனும் மற்றும் முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்துமிடப் பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும் துறைச் சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, போக்குவரத்துத்துறை ஆணையர் அ.சண்முகசுந்தரம், இணை போக்குவரத்து ஆணையர் (விதிகள்) ஆ.ஆ.முத்து, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக இணை மேலாண்மை இயக்குநர் குணசேகரன், கண்காணிப்பு பொறியாளர் பாலமுருகன், செயற்பொறியாளர் ராஜன்பாபு, தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் யுவராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.