நில மோசடி வழக்கில் தேடப்பட்ட அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது!

Update: 2024-07-16 07:31 GMT

எம்.ஆர். விஜயபாஸ்கர் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நில அபகரிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுக்கா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அபகரித்துவிட்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதன் பிறகு இந்த வழக்கை சிபிசிஐடி கையிலெடுத்து விசாரித்த வந்தது. இதனால் விஜயபாஸ்கர் கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனது தந்தையின் உடல்நலத்தை காரணமாக கொண்டு முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்து வருகிறார்.

மீண்டும் முன் ஜாமீன் கேட்ட இவரது முன் ஜாமீன் மனு கரூர் நீதிமன்றத்தில் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 5 தனிப்படைகள் அமைத்து தேடப்பட்டு வந்தார்.  

கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிங்களுக்கு தப்பி சென்றிருக்கலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை கேரளாவில் வைத்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீசார் கைது செய்திருந்தனர். கேரளாவில் கைது செய்யப்பட்டவரை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் ஆஜர் செய்யப்பட்டப்பட்ட பின்னர் தமிழகம் அழைத்து வரப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

Similar News