மலர் கண்காட்சியை துவக்கி வைத்த அமைச்சர் உதயநிதி
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு செம்மொழி பூங்காவில் நடைபெறும் மலர்கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.;
Update: 2024-02-11 05:05 GMT
மலர் கண்காட்சி துவக்கம்
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள செம்மொழி பூங்காவில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறும் மலர்கண்காட்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், அன்பரசன் , தயாநிதி மாறன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர் இந்த கண்காட்சியானது 10 நாட்கள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.