ஏரலில் வெள்ள பாதிப்பை பார்வையிட்ட அமைச்சர் உதயநிதி
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏரலில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள பெருங்குளம் நடுவூர் மங்கல குறிச்சி கீழமங்கலம் குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார் தொடர்ந்து கீழ மங்கல குறிச்சி கிராமத்தில் வெள்ளத்தால் இடிந்த வீடுகளை பார்வையிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து அரசின் உதவிகள் விரைவில் கிடைக்கும் என தெரிவித்தார் மேலும் அவர்களுக்கு நிதி உதவியையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தொடர்ந்து ஏரல் பகுதியில் உள்ள ஆத்துப்பாலம் வெள்ளத்தால் இடிந்து விழுந்துள்ளது இந்த பாலத்தையும் பார்வையிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பணிகளை விரைவாக முடிக்கும்படி அதிகாரிகளை கேட்டுக்கொண்டார் தொடர்ந்து ஏரல் பகுதியிலீ நிவாரண முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களை சந்தித்து அவர்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார் தொடர்ந்து தெற்கு வாழவல்லான் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் ஏ வா வேலு, மூர்த்தி அனிதா ராதாகிருஷ்ணன் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்