"மோடியின் சுற்றுப்பயணம் வெற்றுப் பயணம்" - மு.க ஸ்டாலின் பேச்சு!
தர்மபுரியில் முடிவுற்ற திட்டங்களை துவங்கவும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு உள்ளார். அப்போது அவர் பேசுகையில், மாநில அரசின் ஆக்சிஜனான வரி வருவாய் பறிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
பத்து ஆண்டுகளாக சிலிண்டரின் விலை 500 ரூபாய்க்கு மேல் உயர்த்தி விட்டு தேர்தல் வரும் நேரத்தில் நூறு ரூபாய் குறைப்பது அப்பட்டமான மோசடி என்றும், மாநில அரசிடம் பணம் வாங்கித்தான் ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் பொட்டி கொள்கிறார் மோடி என்றும் மத்திய அரசின் மீது விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் வெறும் கையால் முழம் போடுவதாகவும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
அதேபோல் பிரதமர் மோடியை தமிழகத்திற்கு அடிக்கடி பயணம் மேற்கொள்கிறார். தமிழகத்தில் வெள்ளம் வந்த போது வராத பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுக்காக மட்டும் தமிழகம் வருவது அப்பட்டமாக தெரிகிறது என்று கூறினார்.