ரெட்டிப்பட்டியில் பொதுமக்களிடம் அருள் எம்.எல்.ஏ. குறைகள் கேட்பு

பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுவதாக தெரிவித்தார்

Update: 2023-12-04 06:47 GMT

எம்எல்ஏ அருள் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு நாளும் பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்து வருகிறார். இதனடிப்படையில் சேலம் 1-வது வார்டுக்குட்பட்ட ரெட்டிப்பட்டி பகுதியில் மேற்கு தொகுதி அருள் எம்.எல்.ஏ. பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அங்கிருந்த பொது மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர். இந்த கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி தருவதாக அவர் உறுதியளித்தார். அப்போது பகுதி தலைவர் செந்தில் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News