சேலத்தில் ரேஷன் கடையில் அருள் எம்.எல்.ஏ. ஆய்வு

பொதுமக்களிடம் பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்தார்

Update: 2023-12-10 11:29 GMT

எம்எல்ஏ அருள் ஆய்வு மேற்கொண்ட போது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் கருக்கல்வாடி பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு அருள் எம்.எல்.ஏ. நேரில் சென்று பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடைக்கு பொருட்கள் வாங்க வந்த மக்களிடம் அடிப்படை பிரச்சினை குறித்தும், பொருட்களின் தரம், எடை சரியாக வழங்கப்படுகிறதா? என்றும் கேட்டறிந்தார். ஆய்வின் போது கருக்கல்வாடி ஊராட்சி மன்ற தலைவரும், பா.ம.க. ஒன்றிய செயலாளருமான பாப்பா கணேசன், ஒன்றிய தலைவர் அருள்மணி, ஒன்றிய கவுன்சிலர் சின்னத்தம்பி, மாவட்ட துணை செயலாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் பிரபு அய்யந்துரை, மணி, சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News