எம்எல்ஏ விஜயதாரணியை தொடர்பு கொள்ளமுடியவில்லை

தமிழக காங்கிரஸ் கட்சியின் தொடர்பை ஏற்க மறுக்கிறார் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி என தமிழக காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் கோபண்ணா தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-17 14:06 GMT

விஜயதாரணி எம்எல்ஏ

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பாஜகவில் இணைய உள்ளதாக கடந்த ஒரு வாரமாக தகவல் பரவிய நிலையில் அவரை காங்கிரஸ் தலைமை தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் அவர் தொடர்பை ஏற்க மறுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இன்று காலையில் விஜயதாரணியை தொடர்பு கொள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா முயற்சி செய்ததாகவும் அவர் தொடர்பை ஏற்க மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார். நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடருக்கு கூட விஜயதாரணி கலந்து கொள்ளாத நிலையில் அவரை தொடர்பு கொள்ள பலமுறை முயற்சி செய்தும் அவர் அழைப்பை ஏற்கவில்லை என தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைமையுடன் விஜயதாரணி தொடர்பில் இல்லை எனவும் கோபண்ணா தகவல் தெரிவித்துள்ளார்‌.

Tags:    

Similar News