ஒக்கி புயலுக்கு ஒரு பைசா கூட தராத மோடி! - உதயநிதி ஸ்டாலின்
நாகர்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
Update: 2024-04-12 02:17 GMT
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய உதயநிதி, ''2021 தேர்தலில் நாகர்கோவிலில் கழக வேட்பாளரை தோல்வியுற செய்தீர்கள். ஏமாந்தது நீங்கள்தான். கடந்த 2017ஆம் ஆண்டில் ஒக்கி புயலில் பாதிப்படைந்த கன்னியாகுமரி மக்களை ஹெலிகாப்டரில் வந்து பார்த்துவிட்டுச் சென்ற மோடி, ஒரு பைசா கூட நிவாரண நிதி கொடுக்கவில்லை. எனவே 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வசந்தை வெற்றிபெறவைக்க வேண்டும்.'' என கூறினார்.