திமுக மாவட்ட செயலாளரிடம் பணம் பறிமுதல்
திமுக மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ. 28.5 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-04-05 01:51 GMT
ஆவுடையப்பன்
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் தமிழக சபாநாயகருமான ஆவுடையப்பன் வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று (ஏப்.4) இரவு அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத 28.5 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் திமுகவினருக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டது.