அதிமுகவில் இணைந்த 300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள்
சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் முன்னிலையில் 300-க்கும் மேற்பட்ட வேறு காட்சிகளை சேர்ந்த வழக்கறிஞர்கள் அதிமுகவில் இணைந்தனர்.
Update: 2024-03-19 09:21 GMT
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திற்கு நேரில் வந்து எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில இணை செயலாளர் பால முருகன் தலைமையில் திமுக, காங்கிரஸ், அமமுக மற்றும் ஓ பி எஸ் அணியினர் சார்ந்த வழக்கறிஞர்கள் 300 கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். தொடர்ந்து, சமூக சமத்துவப் படை கட்சித் தலைவரும் முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரியுமான சிவகாமி ஐ ஏ எஸ் ஆதரவு தெரிவித்தார். அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட செயளாலர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் அனைத்திந்திய உழைக்கும் படைப்பாளி வாழ்வுரிமை கட்சி மற்றும் தமிழ்நாடு எம் கே தியாகராஜ பாகவதர் பேரவை சார்ந்தவர்கள் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.