3000க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கடலுக்கு செல்லவில்லை!
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரை சுமார் 3000 திற்கும் மேற்பட்ட நாட்டுபடகுகள் மற்றும் பைபர் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வில்லை
சென்னை, வானிலை ஆய்வு மையம் மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமம், சார்பில் 18.05.2024 அன்று முதல் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடற்பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 17.05.2024 அன்று முதல் வருகிற 22ஆம் தேதி வரை குமரி கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோர பகுதிகளில் சுழல் காற்றானது மணிக்கு 45 கி.மீ முதல் 55கி.மீ வேகம் வரை மேலும் சில நேரங்களில் 65 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் நாட்டுப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க் செல்லக்கூடாது எனவும், தங்களது படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைக்குமாறு மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் தருவைகுளம் தூத்துக்குடி காயல்பட்டினம் வீரபாண்டியபட்டினம் மற்றும் பெரியதாழை வரை சுமார் 3000 திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகு மற்றும் பைபர் படகுகள் நான்காவது நாளாக கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன இதன் காரணமாக சுமார் 20,000 மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்