மருமகள் இறந்த துக்கத்தில் மாமியார் தற்கொலை

ஜெயங்கொண்டம் அருகே மருமகள் இறந்த துக்கத்தில் மாமியார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-03 01:46 GMT
ஜெயங்கொண்டம் அருகே மருமகள் இறந்த தாளாமல் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட மாமியார் மணிமேகலை

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி தாலுகா நெடுஞ்சேரி புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் என்பவரது மகள் ரஞ்சிதா (24) என்பவருக்கும் அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள வானவநல்லூர், சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (56), இவருடைய மகன் மணிவண்ணன்.மணிவண்ணனுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இவர்கள் இருவருக்கும் குழந்தைகள் இல்லை. மணிவண்ணன் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார்.இந்நிலையில் கடந்த 27-ந்தேதி ரஞ்சிதா குடும்பப் பிரச்சினை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத போது தனது துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சென்று அவரை காப்பாற்றியுள்ளனர். இருப்பினும் அவர் இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீசார் ரஞ்சிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், ரஞ்சிதாவின் கணவர் மணிவண்ணன் மற்றும் மாமியார் மணிமேகலை (54) ஆகியோர் ரஞ்சிதா இறந்த துக்கம் தாளாமல் கடந்த மூன்று நாட்களாக இருவரும் சாப்பிடாமல் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணமூர்த்தி, மனைவி மணிமேகலை மற்றும் மகன் மணிவண்ணன் ஆகியோர் வீட்டில் தூங்கியதாக தெரிகிறது.நேற்று அதிகாலை 2 மணியளவில் எழுந்து பார்த்த போது மணிமேகலையை காணவில்லை.அக்கம் பக்கத்தில் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

பின்னர் வீட்டின் பின்புறம் சென்று பார்த்த போது மணிமேகலை வைக்கோல் போர் அருகே வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மணிமேகலையை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மீன்சுருட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தனசெல்வன் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

Similar News