அதிகாலை பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி
கோவில்பட்டியில் அதிகாலை வரை நீடித்த பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். ;
By : King 24x7 Angel
Update: 2024-02-23 10:23 GMT
அதிகாலை பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் பனிப்பொழி அதிகரித்து காணப்படுகின்றது. இந்நிலையில், இன்று காலை வரை எதிரில் இருப்பவர்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. மேலும் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புகைமூட்டமாக காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். இதனால், வாகன ஓட்டிகள், விபத்து ஏற்படுவதை தடுக்க வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றனர்.