ஆபத்தை உணராமல் கரடியை புகைப்படம் எடுக்கும் வாகன ஒட்டிகள்

ஆசனூர் வனப்பகுதியில் உலா வரும் கரடியுடன் வாகன ஓட்டிகள் இறங்கி புகைப்படம் எடுக்க வேண்டாம் என வன அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.

Update: 2024-03-07 06:15 GMT


ஆசனூர் வனப்பகுதியில் உலா வரும் கரடியுடன் வாகன ஓட்டிகள் இறங்கி புகைப்படம் எடுக்க வேண்டாம் என வன அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்கு வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதி முழுவதும் காய்ந்து குளம், குட்டைகள் வறண்டு கிடப்பதால் உணவு, தண்ணீர் தேடி வன விலங்குகள் விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும், சாலையில் செல்லும் வாகனங்களை வழி மறித்து உணவு உள்ளதா? என தேடுவதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில் ஆசனூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆசனூரில் இருந்து காரப்பள்ளம் செல்லும் சாலை ஓரத்தில் கடந்த ஒரு மாத காலமாக 3 கரடிகள் சாலை ஓரங்களில் உலா வருகின்றன. இந்த காட்சியை ஒரு சில வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு கரடி உலா வருவதை புகைப்படம் எடுப்பதும், செல்பி எடுப்பதும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, தங்களது கரடிகளை செல்போனில் படம் எடுப்பது, அதன் அருகே செல்வது ஆபத்தில் முடிவடையும். வாகன ஓட்டிகள் காரில் செல்லும்போது தேவையில்லாமல் வனப்பகுதியில் இறங்க வேண்டாம். வன விலங்குகளுக்கு தொந்தரவு செய்தால் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே இது குறித்து வாகன ஓட்டிகளுக்கு போதிய அறிவுரை வழங்கியுள்ளோம். இதை மீறும் வாகன ஓட்டிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். என்றனர்.

Tags:    

Similar News