உதகை - குன்னூர் இடையே மலை ரயில் போக்குவரத்து துவக்கம்

Update: 2023-11-14 05:21 GMT

ஊட்டி மலை ரயில் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கன மழை எச்சரிக்கை மற்றும் தண்டவள சீரமைப்பு பணிகள் காரணமாக கடந்த 10-ந்தேதி முதல் நேற்று வரை உதகை - குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை ரத்து செய்யபட்டு இருந்தது. இதனால் 4 நாட்களாக சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்து வந்த நிலையில் இன்று காலை முதல் உதகை - குன்னூர் இடையே ரயில் சேவை வழக்கம் போல தொடங்கியது. இதனையடுத்து மலை ரயிலில் பயணம் செய்ய நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர்.  ரயிலில் பயணம் செய்ய ஏராளமானோர் உதகை ரயில் நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.
Tags:    

Similar News